
இசையமைப்பாளர்களில் அதிகமான ரசிகர்களை கொண்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான்.
இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம் ஒரு பேட்டியின் போது நிருபர் "80களில் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் வருடத்திற்கு 40 முதல் 50 படங்களுக்கு இசையமைத்தனர், அதில் வித்யாசமாக பல விஷயங்கள் இருந்தது, ஆனால் தற்போது உள்ளவர்கள் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் பணியாற்றினாலும் அதில் வித்யாசம் காட்டப்படுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், அப்போதைய நிலையில் 'நாற்பது, ஐம்பது, படங்களுக்கு கூட இசை அமைப்பது மிகவும் சுலபம் தான். அவற்றில் எத்தனை பாடல்கள் ஹிட் ஆகிறது என்றுதான் பார்க்க வேண்டும்," என கூறியுள்ளார்.
ரகுமானின் இந்த பதில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா ரசிகர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ஏ.ஆர்.ரகுமானின் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.