அர்ஜுன் ரெட்டி நாயகனின் முதல் தமிழ் படம்...!

 
Published : Mar 06, 2018, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
அர்ஜுன் ரெட்டி நாயகனின் முதல் தமிழ் படம்...!

சுருக்கம்

arjun redy actor vijay thevarakonda acting first tamil movie

இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து - வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் - கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் - எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ்,  ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி,சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாகும் படத்தை  தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்ஸாதா, நாசர், சத்யராஜ், எம் எஸ் பாஸ்கர் என பலர் நடிக்கிறார்கள். 

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆனந்த் சங்கர்.  இவர் விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி, விக்ரம் நடித்த இருமுகன் ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்திற்கு சாந்தா ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் அவர்களின் வாரிசு என்பதும், தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம் இது என்பதும் கவனிக்கத்தக்கது.  

இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைக்க, கலை இயக்கத்தை கிரண் மேற்கொள்கிறார்.

படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜுன் ரெட்டிக்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் அவர் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்
ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்