பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தின் முக்கிய தகவல் வெளியானது...!

 
Published : Mar 06, 2018, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தின் முக்கிய தகவல் வெளியானது...!

சுருக்கம்

important update for basker oru raskel movie

மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும்  வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் இந்த படத்தை ரீமேக் செய்துள்ளார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார். இவருக்கு  ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன்  நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு  விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். 

ஆக்‌ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களளையும் கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இப்படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்
ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்