அந்தமாதிரி காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தேன்... அர்ஜுன் ரெட்டி நாயகி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்...

 
Published : May 28, 2018, 01:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
அந்தமாதிரி காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தேன்... அர்ஜுன் ரெட்டி நாயகி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்...

சுருக்கம்

arjun reddy heroine statement

கதாநாயகனுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தாக அர்ஜுன் ரெட்டி பட நாயகி ஷாலினி பாண்டே கூறியிருக்கிறார்.

`அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. முதல் படத்திலே நல்ல பெயரை பெற்றதால் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சமீபத்தில் வெளியான `நடிகையர் திலகம்' படத்திலும்  நடித்திருந்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக `100% காதல்', ஜீவா ஜோடியாக “கொரில்லா” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமாவுக்கு வந்தது பற்றி "ஷாலினி பாண்டே" கூறியதாவது; “சினிமாவில் நடிக்க எனது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும்படி நிர்ப்பந்தித்தனர். ஆனால், அதை மீறி நாடகங்களில் நடித்தேன். பிறகு சினிமா வாய்ப்பு தேட வீட்டில் சண்டை போட்டுவிட்டு மும்பை சென்றேன். அப்போது எனது தந்தை நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார்.

மும்பையில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ தனியாக வீடு கொடுப்பது இல்லை. இதனால் இரண்டு ஆண்கள் இருந்த வீட்டில், நானும் இன்னொரு பெண்ணும் தங்கினோம். அந்த ஆண்கள் நல்ல குணம் உள்ளவர்கள். நன்றாக கவனித்தனர். ஒரு முறைகூட என்னை தவறாக பார்க்கவில்லை. அவர்கள் தொடர்பால் புதிய உலகத்தை பார்த்தேன்.

அர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று பெயர் வாங்கி கொடுத்ததும் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். என் வாழ்க்கையில் கல்லூரியில் படிக்கும்போதும், சினிமாவுக்கு வந்த பிறகும் 2 முறை காதல் வந்து, அந்த இரண்டு காதலும் தோல்வியில் முடிந்தன.

அர்ஜுன் ரெட்டி, படத்தில் நடித்தபோது காதல் தோல்வியால் தவித்து வந்தேன். அப்போது கதாநாயகனுடன் நெருக்கமான, லிப்லாக் காட்சிகள்,  காதல் செய்யும் காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தேன் இவ்வாறு ஷாலினி பாண்டே கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' பட கதை இதுதானா? லீக்கான ஸ்டோரி... ஷாக் ஆன படக்குழு..!
கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்