Aneethi Review: வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் ஹீரோவாக ஜெயித்தாரா? அநீதி படத்தின் விமர்சனம்!

Published : Jul 21, 2023, 06:01 PM IST
Aneethi Review: வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் ஹீரோவாக ஜெயித்தாரா? அநீதி படத்தின் விமர்சனம்!

சுருக்கம்

எதார்த்தமான கதைக்களத்தை மையமாக வைத்து படம் இயக்கி, தன்னுடைய வெற்றியை பதிவு செய்த இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில், வெளியாகி உள்ள 'அநீதி' படம் எப்படி இருக்கிறது? என ரசிகர்கள் கூறிய ட்விட்டர் விமர்சனம் இதோ..  

வெயில், அங்காடித்தெரு, போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் கடைசியாக 'ஜெயில்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது நடிகர் அர்ஜுன் தாஸை ஹீரோவாக வைத்து இவர் இயக்கியுள்ள 'அநீதி'  திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வழக்கம்போல் தன்னுடைய பாணியிலேயே, எளிமையான மனிதர்களை மையப்படுத்தியே இந்த படத்தை இயக்கியுள்ளார் வசந்த பாலன். மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஹீரோ அர்ஜுன் தாஸ்... புட் டெலிவரி பாய்யாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். மனநோயால் பாதிக்கப்பட்ட ஹீரோ அர்ஜுன் தாஸும், ஹீரோயினும் சூழ்நிலை காரணமாக ஒரு குற்ற சம்பவத்தில் சிக்கிக் கொள்ள, அதன் பின் என்ன நடக்கிறது? என்பதை படபடக்க வைக்கும் கதைகளத்தில் பிரமிப்பூட்டும் காட்சிகளோடு கூறியுள்ளார் வசந்த பாலன்.

தனுஷ் முதல்... லோகேஷ் கனகராஜ் வரை அணிந்திருக்கும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா? வெற்றியின் சீக்ரெட்!

வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்ட அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்தால் செட்டாகுமா? என பலர் நினைத்த நிலையில், அதற்கு பதிலடி கொடுப்பது போல் தன்னுடைய பர்ஃபார்மன்ஸிலேயே பின்னி பெடல் எடுத்துள்ளார். அதிலும் தன்னுடைய உணர்வுகளால் இவர் நடித்துள்ள காட்சிகள் ரசிகர்கள் மனதையே புரட்டிப் போடும் விதத்தில் அமைந்துள்ளது. அதேபோல் துஷாரா விஜயனும் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் ஏற்ற அளவு தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

ஒரு சில மைனஸ் பாயிண்ட்ஸ் இந்த படத்தில் இருந்தாலும், நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் குறித்து ரசிகர்கள் கூறியுள்ள ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

மற்றொரு ரசிகர், அநீதி படத்தில், அர்ஜுன் தாஸ், துஷாரா, காளிவெங்கட் ஆகியோர் தங்களின் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள BGM நன்றாக உள்ளது. ஒரு உணர்வுள்ள கதை. இருப்பினும் உணர்ச்சி ரீதியாக இணையமுடியவில்லை. எழுத்து இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

கயலிடம் கையும் களவுமாக சிக்கிய எழிலின் அம்மா! திருமணத்தில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்.. இனி நடக்க போவது இதுதான்!
 

 

அநீதி படம் குறித்து விமர்சனம் செய்துள்ள மற்றொரு ரசிகர்...  "முதல் பாதி சற்று தாமதமாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது.  இது ஒரு வித்தியாசமான கதை மற்றும் புதிய கதை. அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாராவின் கெமிஸ்ட்ரி கச்சிதமாக இருந்தது. கண்ணியமான பார்க்கக்கூடிய திரைப்படம் பிஜிஎம் மற்றும் பாடல்கள் படத்தின் ப்ளஸ் பாயின்ட் என தெரிவித்துள்ளார்.

முதலாளித்துவம் பற்றிய இந்த படத்தில், ஒரு பிரச்சனையுள்ள இளைஞனாக ஆழமான  நடிப்பை வெளிப்படுத்துகிறார் அருஜுன் தாஸ். சுவாரஸ்யமான கதைக்களம். அர்ஜுன், துஷாராவின் நடிப்பும் அபாரம். இசையும் நன்றாக உள்ளது என இந்த ரசிகர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!