நீங்கதான் தமிழகத்தின் விடிவெள்ளிகளா ? விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கும் கஸ்தூரி..!

Published : Oct 26, 2019, 11:40 AM IST
நீங்கதான் தமிழகத்தின் விடிவெள்ளிகளா ? விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கும் கஸ்தூரி..!

சுருக்கம்

பிகில் எத்தனை சாதனைகள் செய்வித்திருந்தாலும் , இந்த படத்தை நினைக்கும் போதெல்லாம் இந்த வன்முறை நிகழ்ச்சி ஞாபகத்தில் இருந்துக் கொண்டே இருக்கும். 

ஒரு சினிமா காட்சிக்காக பொதுச் சொத்தை அழிக்கும்  இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிகளா ? அய்யோ என பிகில் படம் கலவரம் பற்றி நடிகை கஸ்தூரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

முதலில் சிறப்பு காட்சி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும், நேற்று ஒரு நாள் மற்றும் அரசால் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள திரையரங்கில் பிகில் சிறப்புக் காட்சி நள்ளிரவு வெளியாகவில்லை எனக்கூறி விஜய் ரசிகர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

அந்த கலவரத்தால் ரவுண்டானா சிக்னலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள், போலீசாரின் ஒலிபெருக்கிகள், நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டன. அது மட்டுமின்றி அங்கு இருந்த பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து, தீ வைத்து எரிக்கப்பட்டன.

 

 இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி,  'பிகில் எத்தனை சாதனைகள் செய்வித்திருந்தாலும் , இந்த படத்தை நினைக்கும் போதெல்லாம் இந்த வன்முறை நிகழ்ச்சி ஞாபகத்தில் இருந்துக் கொண்டே இருக்கும். இந்த சம்பவம் யாருடைய வேலை என்பது தெரியவில்லை. உண்மையான விஜய் ரசிகர்கள் இந்த செயலை செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம். விஜயின் ரசிகனோ எதிரியோ என்னவோ.  எல்லோரும் இளைஞர்கள். ஒரு சினிமா காட்சிக்காக பொதுச்சொத்தை அழிக்கும்  இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிகளா ? அய்யோ’’என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!