
பாலிவுட் நாயகிகள் பலர் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
சமீபத்தில் கூட தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2 வில் நடிகை கஜோல் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் மலையாள உலகில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை தமிழில் ரீமேக் செய்யபடுகிறது.
இதில் நடிக்க ரஜினி முதற்கொண்டு பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை சென்று கடைசியில் அரவிந்த் ஸ்வாமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, மீண்டும் பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ் ரீமேக்கில் அரவிந்த் சுவாமி ஜோடியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
விரைவில் இந்த படம் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.