
பிரபல தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க செயலாளருமான, அம்மா கிரியேஷன் உரிமையாளர் டி.சிவா அலுவலகத்தில் நேற்று போலீசார் தீடீர் சோதனை மேற்கொண்டனர்.
வேந்தர் மூவீஸ் மதன்னுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டதற்காக இந்த சோதனை நடத்த பட்டதாக கூறப்படுகிறது.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவ சீட் முறைகேடு வழக்கில் கைது செய்ய பட்டுள்ள மதனும், டி.சிவாவும் இணைத்து பல படங்களை தயாரித்தும், விநியோகித்தும் உள்ளானர்.
தற்போது மதன் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், தயாரிப்பாளர் டி.சிவா அலுவலகத்தில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷ்னர், ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அங்கு பணியில் இருந்த அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது .
அப்போது அம்மா கிரியேஷன்னுக்கும் வேந்தர் மூவிஸ்கும் உள்ள பண பரிவர்த்தனைகள் குறித்து தீவிரமாக விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.