
மெளனமாக இருந்து வந்த முதலமைச்சர் பன்னீர்செல்வம், மௌனம் கலைத்ததும் அரசியலில் பல எதிர்பார்த்த சம்பவங்கள் அரங்கேரி வருகிறது. அதிலும் அடுத்து, முதலமைச்சர் பதவியை சசிகலா பிடிப்பாரா அல்லது ஓ.பன்னீர்செல்வம் பிடிப்பாரா என்பதை அறிய தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கின்றது.
இந்நிலையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர்ராவ் சென்னை வரவுள்ளதாகவும், அவர் வந்தபின்னர் யார் அடுத்த முதலமைச்சர் என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல நடிகர் அரவிந்தசாமி தமிழக மக்களுக்கு கோரிக்கை ஒன்றை தனது சமூக வலைத்தளத்தின் மூலம் வைத்துள்ளார்.
தமிழக மக்கள் உடனடியாக தங்களுடைய தொகுதி எம்.எல்.ஏக்களையோ, அல்லது உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகளையோ தொடர்பு கொண்டு யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற தங்களுடைய கருத்தை உடனே தெரிவிக்க வேண்டும் என்றும், மக்களின் விருப்பத்தை அறிந்து ஜனநாயகப்படிதான் முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரவிந்தசாமியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பலரும் அவரது ஐடியாவை பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.