ஓவியாவைப் பார்த்து ஏக்கத்தோடு கேள்வி கேட்ட ஆரவ்!

Asianet News Tamil  
Published : Oct 11, 2017, 12:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
ஓவியாவைப் பார்த்து ஏக்கத்தோடு கேள்வி கேட்ட ஆரவ்!

சுருக்கம்

arav asking question for oviya

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் 100 நாட்களை எட்டி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை மாடல் ஆரவ் வென்றார்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப் படுத்தும் வகையில். பிக் பாஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில் விஜய் டிவி தொலைக்காட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில்  ரசிகர்கள் பலரால் ரசிக்கப்பட்ட ஜோடி நடிகை ஓவியா மற்றும் ஆரவ். இவர்கள் இருவரும் உண்மையில் இணைந்தால் நன்றாக இருக்கும் என பல ரசிகர்கள் தங்களுடைய கருத்தையும் வலைத்தளம் மூலம் தெரிவித்தது அனைவரும் அறிந்ததுதான். 

ஆனால் ஒரு சில காரணங்களால் ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்க பின் ஓவியா தற்கொலை வரை சென்று, இந்த நிகச்சியை விட்டு வெளியேறினார். தற்போது இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் ஆரவ் தன்னுடைய மனதில் உள்ள கேள்விகளை ஓவியாவிடம் கேட்டுள்ளார்.

இந்த ப்ரோமோவில் ஆரவ் ஓவியாவிடம் 'இப்போ லைஃப் எப்படி போகிறது?” என கேட்க, அதற்கு ஓவியா சூப்பரா போகுது என பதில் அளித்தார்'. இதற்கு தொகுப்பாளர் மாகாபா என்ன ஒரு ஏக்கமான கேள்வி என ஆரவை கலாய்த்துள்ளது வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Awards: அப்பாடி.! வரிசைகட்டும் 18 அரசு விருதுகள்! ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்த ஹீரோ.! யார் தெரியுமா?
Gandhi Talks Review : விஜய் சேதுபதியின் சைலண்ட் படம் சம்பவம் செய்ததா? காந்தி டாக்ஸ் விமர்சனம் இதோ