நயன்தாரா போல் கலெக்ட்டர் ஆகி உதவி செய்யணும் ..! அறம் பேபியின் ஆசை..!

 
Published : Nov 16, 2017, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
நயன்தாரா போல் கலெக்ட்டர் ஆகி உதவி செய்யணும் ..! அறம் பேபியின் ஆசை..!

சுருக்கம்

aram baby mahalakshmi speech

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி அனைவருடைய பாராட்டுக்களையும்பெற்று, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் திரைப்படம் அறம். இந்தப் படத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை லேடி சூப்பர் ஸ்டார் என நிரூபித்துள்ளார் நயன்தாரா.

இந்தப் படத்தில் நயன்தாராவை அடுத்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றவர் அறம் பேபி மகாலட்சுமி. இந்தப் படத்திற்கு உயிர் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டியில், வருங்காலத்தில் நயன்தாராவைப் போல் ஒரு கலெக்டர் ஆகி, பலருக்கும் உதவ வேண்டும் என கூறியுள்ளார்.

மகாலட்சுமி, தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை ஒரு கூலித் தொழிலாளி. சினிமாவின் எந்த ஒரு சாயமும் இல்லாமல் நடிப்பில் கலக்கி இருக்கும் இவருக்கு உறவினர் ஒருவரால் இந்த வாய்ப்பு கிடைத்ததாம். மேலும் அறம் படத்திற்குப் பிறகு பள்ளியில் தன்னை பலர், அறம் பேபி என்று கூப்பிடுவதாகவும், தன்னுடன் செலஃபீ எடுக்க பலர் ஆர்வம் காட்டி வருவதாகவும் மழலைச் சொல் மாறாமல் கூறுகிறார் மகாலட்சுமி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!