
நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் என்பது சாதாரண ஒரு விஷயம்...அதுவும் ரஜினி கமல், விஜய் என சினிமா நட்சத்திரங்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்
அந்த வரிசையில் தல அஜித்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதுவும் அவருடைய நடிப்பிற்கு இருக்கும் ரசிகர்களை விட, அஜித் செய்து வரும் சில நல்ல காரியங்களுக்காகதான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே கூறலாம்
சமீபத்தில் கூட ஒரு மருத்துவர் மூலமாக கண் பார்வை பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களுக்கு அஜித் உதவியதாக நடிகர் ராதா ரவி ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்
இந்நிலையில், வயதான பெண் ஒருவர் அஜித்க்கு முழு ஆதரவு தெரிவித்து சில கருத்துகளை தெரிவித்து உள்ளார் . அதில், அஜீத் அன்னதானம், ஏழை குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம் என பல உதவிகளை அஜித் செய்து வருகிறார்
கொட்டிவாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததாகவும் கூறியுள்ளார்.
அவர் விளம்பரம் இல்லாமல் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்.அப்படிப்பட்ட தல அஜீத்தை பற்றி, யாராவது தப்பாக பேசினால், சோடா பாட்டில் பறக்கும் என துப்புரவு தொழிலாளியான அந்த பெண் கோபமாக தெரிவித்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் தல அஜித்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என முணங்கிக்கொண்டே சென்றுள்ளனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.