ட்விட்டர் ஆலோசகராக மாறும் ஏ.ஆர்.ரகுமான்! அடுத்த இடத்தில் இவர் தான்?

By manimegalai aFirst Published Nov 18, 2018, 5:39 PM IST
Highlights

பெரும்பாலும் இந்திய நிறுவனங்களில் ஆலோசகர், மற்றும் அம்பாசிடர் போன்ற பதவிகளை பிரபலங்களுக்கு மட்டும் தான் வழங்கி வருகிறார்கள். சில சமயங்களில் இந்த வாய்ப்பு விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு செல்கிறது.

பெரும்பாலும் இந்திய நிறுவனங்களில் ஆலோசகர், மற்றும் அம்பாசிடர் போன்ற பதவிகளை பிரபலங்களுக்கு மட்டும் தான் வழங்கி வருகிறார்கள். சில சமயங்களில் இந்த வாய்ப்பு விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு செல்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த ட்விட்டர் சமூக வலைதளத்தின்  சிஇஓ ஜேக் டார்சி,  ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளார். இதற்க்கு காரணமும் உண்டு, அதாவது இவர்கள் இருவரில் ஒருவரை  தான் இந்தியாவின் ட்விட்டர் ஆலோசகராக நியமனம் செய்ய  இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

 

உலகம் முழுவதும் ட்விட்டர்,  ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும். இந்தியாவின் கலைதுறைக்கு ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ட்விட்டரில் அதிக ஆக்டிவ்வாக இருக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 கோடி ட்விட்டர் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பாலிவுட் நடிகர் ஷாருக் கானையும் ட்விட்டர் சி.இ.ஓ ஜேக் டார்சி சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் இந்தியா வந்த ஜேக் பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தலைவர்களையும் சந்தித்தார். அப்போது அவர்களுடன் இந்திய உணவு குறித்து அதிகம் பேசினார். பின் ஆட்டோவும் ஓட்டி மகிழ்ந்த ஜேக் அதன் வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!