இந்தியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறேன்! எதிராக செயல்படும் ஒரு கூட்டம்! ஏ.ஆர்.ரகுமான் பகீர் குற்றச்சாட்டு!

By manimegalai aFirst Published Jul 25, 2020, 3:38 PM IST
Highlights

இந்நிலையில் தானும் இந்தி திரையுலகில் இருந்து புறக்கணிக்க படுவதாகவும் தனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவையும் தமிழர்களையும் தலை நிமிர வைத்த பெருமை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையே சாரும். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்  சமீபத்தில் “கோப்ரா” படத்திற்காக இசையமைத்த “தும்பி துள்ளல்” பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. அது மட்டும் இன்றி அவர் இசை அமைத்து இருந்த பாலிவுட் படமான தில் பேச்சாரா என்ற படத்தின் பாடல்களும் அதிகம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்: முன்னழகை முரட்டுத்தனமாக விமர்சித்த நெட்டிசன்..! இளம் நடிகையின் எதிர்பாராத பதிலடி!
 

சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை விவகாரம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை மிகவும் பாதித்தது. சுஷாந்தின் கடைசி படமான “தில் பேச்சாரா” படத்தின் இசையமைப்பாளராக மட்டுமல்லாது, திரைத்துறையில் ஒரு நல்ல கலைஞனை இழந்ததற்காக வருத்தப்பட்டார் ஏ.ஆர்.ரகுமான். 

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் இந்தி திரையுலகினர் சிலரால் அவர் புறக்கணிக்கப்பட்டது தான் என்பது போன்ற கருத்தையும் தெரிவித்தார். இந்நிலையில் தானும் இந்தி திரையுலகில் இருந்து புறக்கணிக்க படுவதாகவும் தனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: வாயடைத்து போக வைக்கும் பிரமாண்டம்..! நடிகர் அருண் விஜய்யின் வீட்டை பார்க்கலாம் வாங்க..!

இதுகுறித்து, பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றின் பேட்டியில் பேசிய அவர்,  இந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக அவர் கூறியுள்ள்ளார். இவர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர், இசையமைப்பதற்காக தன்னை அணுகிய போது பலர், ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த வாய்ப்பை கொடுக்க வேண்டாம் என தடுத்ததாக அவர் கூறியதாக இந்த பேட்டியில் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்: பற்றி எரியும் பிரச்சனைக்கு நடுவே பீட்டர் பால் பிறந்தநாள் கொண்டாட்டம்..! காருக்குள் வனிதா அடித்த கூத்து..!

இப்படி தொடர்ந்து தன்னை தேடி வரும் நல்ல வாய்ப்புகள் தடுத்து நிறுத்தப்படுவதாக பகிரங்கமாக கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். உலகிலேயே மிக உயரிய விருதை பெற்ற ஆஸ்கர் நாயகன் என்கிற அடையாளம் இவருக்கு இருந்தாலும், இவர் பாலிவுட் திரையுலகில் மிக குறைவான படங்களுக்கே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!