4வது முறையாக இணையும் விஜய் முருகதாஸ்... இந்தமுறை பார்ட் 2 தான்... எந்த படம் தெரியுமா?

Published : Dec 18, 2018, 06:22 PM ISTUpdated : Dec 18, 2018, 06:28 PM IST
4வது முறையாக இணையும் விஜய் முருகதாஸ்...  இந்தமுறை பார்ட் 2 தான்... எந்த படம் தெரியுமா?

சுருக்கம்

துப்பாக்கி படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் திட்டம் இருக்கிறது.  அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கிறது என்று கூறினார். 

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, விஜய்-க்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடித்துள்ளார். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் அவரது உதவி இயக்குனரின் கதையை இயக்கினார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். 2012 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான அந்த படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

துப்பாக்கி படத்தை முருகதாஸ் இந்தியிலும் ரீமேக் செய்தார். தமிழை போன்றே இந்தியிலும் செம்ம ஹிட்டானது. இந்நிலையில் விஜய்யை வைத்து துப்பாக்கி 2 படம் எடுக்க உள்ளதாக முருகதாஸ் விருது விழா ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பல சர்ச்சையில் சிக்கிய சர்கார் பிரமாண்ட வெற்றியை அடுத்து விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். அதன் பிறகு அவர் மீண்டும் முருகதாஸுடன் சேர்ந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என அடுத்தடுத்து வெற்றியை கொடுத்த  முருகதாஸ், விஜய் கூட்டணி  மீண்டும் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. 

சர்கார் பிரச்சனை இன்னும் தொடர்ந்தாலும் யாரிடமும் மன்னிப்பு கேட்கக் கூடாது என்பதில் முருகதாஸ் பிடிவாதமாக இருப்பது. விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 

இந்நிலையில், நேற்று நடந்த விருது வழங்கும் ஒரு விழா நிகழ்ச்சியில் துப்பாக்கி 2 வருமா என்ற கேள்வி எழுப்பியதுக்கு கண்டிப்பாக வரும் துப்பாக்கி படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் திட்டம் இருக்கிறது.  அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கிறது என்று கூறினார். அந்த படத்தின் கதையை மிஞ்சும் அளவிற்கு கதை அமைந்தால் துப்பாக்கி படம் 2-வது பாகம் இயக்குவேன்” என்று கூறியிருந்தார்.

தற்போது தனியார் இணையதளம் நடத்திய விழா ஒன்றில் பங்கேற்று 'பெஸ்ட் சோசியல் ரெஸ்பான்ஸிபிள் பிலிம்மேக்கர்' விருது பெற்றார். அப்போது ரசிகர்கள் துப்பாக்கி 2 எப்போது வரும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முருகதாஸ் கண்டிப்பாக வரும் என்றார். ரஜினி படம் குறித்து கேட்டபோது அரசியல் படமாக இருக்காது என்றும் பதிலளித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!