பிக்பாஸ் சீசன் 2 வில் அபர்ணதியா...? சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்...!

 
Published : Jun 10, 2018, 01:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
பிக்பாஸ் சீசன் 2 வில் அபர்ணதியா...? சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்...!

சுருக்கம்

aparnathi participate in big boss show?

பிரபல தனியார் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட, எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 16 பெண்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் என்றால் அபர்ணதி தான். இவர் மனதில் பட்டதை உடனே வெளியில் பேசி விடுவதாலும், ஆர்யா மீது வைத்திருந்த காதலை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியதாலும் இவருக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு ரசிகர் கூட்டமே உருவானது.

இவரின் செயல்கள் மற்ற போட்டியாளர்களுக்கு கோபத்தை கொடுத்தாலும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. 

'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறியதும் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் ஆர்யா மற்றும் ஒரு சில போட்டியாளர்களுடன் கலந்துக்கொண்டார், அப்போது பேசிய இவர், "நான் நிகழ்ச்சி இருந்து மட்டும் தான் வெளியில் வந்திருக்கிறேன், இன்னும் நான் ஆர்யாவை காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னை இன்னும் நான் மாற்றிக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்". 

ஆனால் நிகழ்ச்சியின் முடிவில் ஆபர்ணதிக்கு, மட்டும் அல்ல ஆர்யாவின் முடிவு அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்த மூன்று பெண்களையும் திருமணம் செய்துக்கொள்வதாக இல்லை என கூறி தப்பித்துக்கொண்டார்.

ஆர்யாவின் நினைவில் இருந்து தற்போது மெல்ல மெல்ல வெளியே வந்துக்கொண்டிருக்கும் அபர்ணதி, சில நகைக்கடை விளம்பரங்கள் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடிக்க திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். 

இந்நிலையில் இவர், விரைவில் பிரபல தொலைக்காட்சியில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படம் இதோ....

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!