
மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளமயம் படத்தில் ஜீவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் அவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
ஆனால் சுதா கொங்கரா இயக்கத்தில் கடத்தாண்டு ஓடிடி-யில் வெளியான “சூரரைப் போற்று” என்ற படம் மூலமாக ஒட்டுமொத்த கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் அபர்ணா.
இப்படத்தில் சூர்யாவின் மனைவியாக பொம்மி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்று சொல்வதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். இதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், நடிகை அபர்ணா பாலமுரளியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அவர் கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இதனால் அவரது ரசிகர்கள் பதறிப்போயினர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அபர்ணா, தான் நலமுடன் இருப்பதாகவும், தன்னுடைய உடல்நிலை பற்றி பரவி வரும் தகவல் உண்மையல்ல, அதை யாரும் நம்ப வேண்டாம் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.