
பாகுபலி படத்தை தொடர்ந்து உடல் எடை காரணமாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த அனுஷ்கா, தற்போது நடித்துள்ள படம் சைலன்ஸ். ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் பார்வையற்றவராக மாதவனும், வாய் பேசமுடியாதவராக அனுஷ்கா ஷெட்டியும் நடிப்பில் மிரட்டியுள்ளனர். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: 50 இடங்களில் வெட்டினாலும்... அசால்டாக ஜெயித்த "ஜிப்ஸி"... ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்...!
படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் 3 மொழி டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 1.24 நிமிடங்கள் ஓடும் இந்த டிரெய்லர், ஓப்பனிங் முதல் இறுதி வரை நம்மை திகிலடைய செய்யும் விதமாக உள்ளது. டிரெய்லரை பார்க்கும் போதே க்ரைம் திரில்லர் படம் என்பது தெளிவாகிறது.
இதையும் படிங்க: ரஜினி கிட்ட காசு வாங்கிட்டியா?... சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!
வழக்கமான ஹாலிவுட் ஹாரர் படங்களைப் போல பழடைந்த வீட்டில் இருந்து டிரெய்லர் ஆரம்பிக்கிறது. அந்த வீட்டில் தாக்கப்படும் அனுஷ்கா, தப்பித்து வெளியே வருகிறார். காவல்துறை அதிகாரியான அஞ்சலி விசாரணை நடத்த, அவரிடம் பேய் தான் தன்னை தாக்கியதாக கூறுகிறார். ஆனால் அதை ஏற்க மறுக்கும் அஞ்சலி தீவிர விசாரணையில் இறங்குகிறார். படத்தில் கோபி சுந்தரின் இசை வேற லெவலுக்கு பங்காற்றியுள்ளது என்பது டிரெய்லரிலேயே தெளிவாக தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.