
கியூட்
பாலிவுட்டில் கியூட் ஜோடியாக வலம் வருபவர்கள் விராட் கோலி அனுஷ்கா சர்மா தம்பதியினர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.
லைக்
அதிலிருந்து இவர்கள் ஒரு போட்டோவை சமூக வலைத்தளத்தில் போட்டால் கூட அத்தனை லைக்குகள் வர ஆரம்பித்தன.விராட் கோலி தமது மனைவி அனுஸ்கா ஷர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது டிவிட்டரில் வெளியிடுவார்.
போஸ்
இந்நிலையில் ஒரு கடையின் சுவரில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்று உள்ளது .இதை பார்த்து கோலியும் அனுஷ்காவும் அதே போல் போஸ் கொடுத்துள்ளனர்.
நீக்கம்
இதை கோலி தமது இன்ஸ்டாகிராமிலும் டிவிட்டரிலும் போஸ்ட் செய்துள்ளார்.அதில் மை ஒன் அண்ட் ஒன்லி என்று பதிவிட்டுள்ளார்.பிறகு அதை ஏனோ நீக்கி விட்டார்.
காதல்னா இதுதான்
நடுரோட்டில் இப்படியா என்று கோலியை யாராவது கலாய்த்ததால் இப்படி செய்தாரா என்று தெரியவில்லை.ஆனால் ஒரு சில ரசிகர்கள் அருமை காதல்னா இதுதான் என்று தெரிவித்து சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.