தினம் இரண்டு நிமிடம் போதும்... கடவுளிடம் நெருங்க...! தனுஷ் அண்ணன் செல்வராகவனின் ஆன்மீக ட்வீட்...!

 
Published : Feb 21, 2018, 05:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
தினம் இரண்டு நிமிடம் போதும்... கடவுளிடம் நெருங்க...! தனுஷ் அண்ணன் செல்வராகவனின் ஆன்மீக ட்வீட்...!

சுருக்கம்

Talk to God for a two minutes each day

தினம் இரண்டு நிமிடமாவது கடவுளிடம் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாது பேசிப் பாருங்கள் எனவும்  நல்லதோ கெட்டதோ அவர் யாரிடமும் சொல்லவும் மாட்டார் எனவும் தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவத்தை பற்றி தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

கோலிவுட்டில் மிக முக்கிய இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது சூர்யா நடிப்பில் தற்போது படத்தை இயக்கி வருகிறார். இப்படம் சூர்யா 36 என அழைக்கப்பட்டு வருகிறது. 

தனக்கான படம் குறித்த அறிவிப்புகளும் சில சமயங்களில் தனக்கு கிடைத்த நல் அனுபவங்களையும் செல்வராகவன் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்வார். 

அதன்படி தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஆன்மீகத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். 
அதாவது, அனுபவத்தில் சொல்கிறேன். தினம் இரண்டு நிமிடமாவது கடவுளிடம் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாது பேசிப் பாருங்கள். நல்லதோ கெட்டதோ அவர் யாரிடமும் சொல்லவும் மாட்டார். கூர்ந்து ,ஆழ்ந்து கேட்டால் அவர் நம் அடி மனதில் எவ்வித பிரச்னைக்கும் விடிவாய் சொல்லும் பதில்களும் கேட்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?