
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை அனுஷ்கா.
அதிலும் தற்போது இவர், பாகுபலி 2 படத்தில் நடித்த பின் அனுஷ்காவின் தரம் மேலும் உயர்ந்துள்ளது. பாகுபலி 2 படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டபட்டும் வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே அனுஷ்காவுடன் ஆர்யா, ராணா, நாகசைதன்யா போன்ற பலருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அனுஷ்கா இதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் படங்கள் நடிப்பதில் மட்டுமே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்திவந்தார் .
தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸுடன் இணைத்து கிசுகிசு வெளியாகி வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வெளிவருவதற்கு காரணம் தன்னுடைய உதவியாளர்களில் ஒருவர் தான் என தெரியவர, கூடவே இருந்து குழி பறித்த அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.