
எனக்கும் அனுஷ்காவுக்கும் “இது உள்ளது “..!
பிரபாஸ்- அனுஷ்கா என்றாலே அடுத்த என்ன கிசு கிசு தெரியலையே என நினைக்க வைக்கும் அளவிற்கு பெயர் போனவர்கள்
அதுவும் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு, இவர்கள் இருவரின் ஜோடியை பார்த்தால்....வேறு எந்த ஜோடியை பார்த்தாலும் நமக்கு பிடிக்காது என சொல்ல வைக்கும் அளவிற்கு அருமையான ஜோடிகளாக படம் முழுக்க வலம் வருகின்றனர்
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தற்போது மீண்டும் கிசு கிசு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது .
இதற்கெல்லாம் ஒரு முற்றுபுள்ளி வைக்க ப்ளான் பண்ண பிரபாஸ் இப்போதுதான் வாய் திறந்து உள்ளார்
அவர் என்ன சொல்கிறார் என்றால், நாங்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளாகக் குடும்ப நண்பர்களாக உள்ளோம். நாங்கள் நல்ல நண்பர்கள். பலவருடங்களாக ஒருவரையொருவர் அறிந்துள்ளோம். ஆனால் எப்போதெல்லாம் எங்களைப் பற்றிய இது போன்று கிசு கிசு வெளிவருகிறதோ அப்போதெல்லாம் எங்கள் இருவருக்கும் இடையில் வேறு ஏதாவது உள்ளதா என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
உண்மையில், எங்கள் இருவருக்கிடையில் அப்படியெதுவும் இல்லை என இருவருக்குமே தெரியும். ஆரம்பத்தில் இதுபோன்ற செய்திகளால் நான் கவலையடைந்துள்ளேன். இப்போது பழகிவிட்டது. இது ஒன்றும் புதிதல்ல. எந்த ஒரு ஜோடியும் ஒரு படத்துக்கு மேல் ஒன்றாகப் பணியாற்றினால் இதுபோன்ற கிசுகிசுக்கள் வருவது சகஜம் எனம சிம்பிள் ஆக சொல்லி முடித்தார்
குறிப்பு :
2009-ல் வெளிவந்த பில்லா படத்தில் பிரபாஸ் - அனுஷ்கா முதல்முறையாக ஜோடியாக நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அன்று தொடங்கிய கிசு கிசு ...இன்னும் கிசு கிசுவாகவே உள்ளது .....
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.