அனுஷ்காவை வைத்து கவுதம் மேனன் போடும் மாஸ்டர் ப்ளான்! வொர்க்அவுட் ஆகுமா?

Published : Nov 22, 2019, 07:48 AM IST
அனுஷ்காவை வைத்து கவுதம் மேனன் போடும் மாஸ்டர் ப்ளான்! வொர்க்அவுட் ஆகுமா?

சுருக்கம்

பிரபல இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம், வரும் நவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது. நீண்ட காலமாக ரிலீசாகாமல் இருந்த இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் வெளியிடுகிறது.   

இதற்கு கைமாறாக, அந்நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் கவுதம் மேனன். இந்தப் படத்திற்கு 'ஜோஸ்வா இமை போல் காக்க' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

2020 ஃபிப்ரவரி காதலர் தின கொண்டாட்டமாக ஜோஷ்வா படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, கவுதம் மேனன் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல கதாசிரியர் கோவிந்த் நிஹாலனி எழுதிய கதையை, அடுத்து படமாக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளாராம். 1995-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற கமல்ஹாசனின் குருதிப்புனல் படத்திற்கு கதையெழுதியவர்தான் இந்த கோவிந்த் நிஹாலனி. அவரது கதை ஒன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருப்பதாகவும், இந்த கதைக்கு மாஸ் திரைக்கதை அமைத்து அனுஷ்கா ஷெட்டியை நடிக்க வைக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்தப் படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கெனவே, கவுதம் மேனன் இயக்கத்தில் நீண்ட காலமாக உருவாகிவரும் சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படம், அடுத்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. 

அத்துடன், ஜெயலலிதா பயோபிக்கை வெப் சீரிஸாக எடுக்கும் பணியிலும் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளார். இப்படி ஏகப்பட்ட கமிட்மெண்ட்களுடன் இருக்கும் அவர், அடுத்த படத்திற்காக அனுஷ்காவை வைத்து போடும் மாஸ்டர் ப்ளான் வொர்க்அவுட் ஆகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!