
பிரபல நடிகர் அனுபம் கேர் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர். இவர் பல்வேறு மொழிகளிலும் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் தோன்றியுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுபம் கேர் தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் சிறந்த உறுதுணை நடிகர் என்று பெயர் பெற்றவர். இவரது மனைவி சண்டிகரிலிருந்து எம்.பி.யாகத் தேர்வான கிரோன் கேர். பாஜக கட்சியை சார்ந்த அனுபம் கேர் கொரோனா இறப்பு குறித்து மத்திய அரசுக்கு எதிராக கூறியிருந்த கருத்து வைரலாக பேசப்பட்டது. இவர் அனுபம் கேர் பவுண்டேசன் என்னும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
அனுபம் கேர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏழை சிறுமியின் காணொளியை பதிவிட்டிருந்தார். இந்த காணொளி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிச்சை எடுக்கும் சிறுமி ஒருவர் அனுபம் கேரை நோக்கி வரும் சிறுமி மிடுக்கான ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறார். நேர்த்தியான தோரணையில் பேசும் அந்த சிறுமி தனக்கு கல்வியை தானமாக அளிக்க கோரும் காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. அவளின் குரலுக்கு செவி மடித்த அனுபம் கேர் தான் நடத்தி வரும் ட்ரஸ்ட் மூலம் கல்வி அளிப்பதாக அந்த சிறுமிக்கு வாக்குறுதி கொடுக்கிறார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அனுபம் கேர்; "காத்மாண்டுவில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே ஆர்த்தியை பார்த்தேன்! அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். அவள் என்னிடம் கொஞ்சம் பணம் மற்றும் என்னுடன் ஒரு புகைப்படம் கேட்டாள். பின்னர் என்னிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள். அவளது கல்வி ஆர்வத்தைக் கண்டு வியந்தேன்! அனுபம் கேர் பவுண்டேஷன் அவள் படிப்பதை உறுதி செய்யும்" என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.