மகள் அனோஷ்கா மேடையில் நடித்ததை கூட்டத்தோடு கூட்டமாக பார்த்து ரசித்த அஜித்..! வைரலாகும் வீடியோ..!

Published : Jul 03, 2020, 12:34 PM ISTUpdated : Jul 03, 2020, 12:40 PM IST
மகள் அனோஷ்கா மேடையில் நடித்ததை கூட்டத்தோடு கூட்டமாக பார்த்து ரசித்த அஜித்..! வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

தல மகள் அனோஷ்கா பள்ளியில், நடித்த நாடகம் ஒன்றை அஜித், அணைத்து பெற்றோர்களுடன் பார்க்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  

தல மகள் அனோஷ்கா பள்ளியில், நடித்த நாடகம் ஒன்றை அஜித், அணைத்து பெற்றோர்களுடன் பார்க்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: ஜோதிகா நடித்த 'லிட்டில் ஜான்' பட நாயகனா இது..? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!
 

தல அஜித் சிறந்த நடிகர் என்பதை விட, நல்ல மனிதர், பொறுப்பான குடும்ப தலைவர் என பல முறை நிரூபித்துள்ளார். அவ்வப்போது கண்ணில் அரிதாக படும் வீடியோக்களை ரசிகர்கள் வைரலாக்கி விடுவார்கள்.

அந்த வகையில், அனோஷ்கா கடந்த சில வருடங்களுக்கு முன், பள்ளியில் நடந்த கலை  விழா ஒன்றில் சக மாணவ, மாணவிகளுடன் மேடை நாடகம் ஒன்றில் நடித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் அஜித் ஓரமாக அமர்ந்து, மகளின் நடிப்பை வேடிக்கை பார்க்கிறார்.

மேலும் செய்திகள்: குத்தாட்டத்தில் மட்டுமல்ல குக்கிங்கிலும் கலக்கும் ஆர்யா மனைவி சாயீஷா..! நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவுகள்...!
 

இதுவே ஒரு சிறந்த தந்தைக்கு எடுத்து காட்டு என, தலயை  தாறுமாறாக புகழ்ந்து தள்ளிவருகிறார்கள். அஜித் கடந்த வருடம், அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் நடித்திருந்த 'விசுவாசம்' திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற , கண்ணான  கண்ணே பாடல், பலரது ரிங் டோனாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின், மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் ”வலிமை” படத்தில் நடித்து வந்தார். 80 சதவீதத்திற்க்கும் மேல் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் உள்ளது. கொரோனா பிரச்சனை முழுவதும் சரியாகிய பின்னரே மீண்டும் அணைத்து பணிகளும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: காமெடி கிங் கவுண்டமணியின் அழகிய பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா...? வாங்க பார்க்கலாம்..!
 

அஜித் மகள் அனோஷ்கா நடிக்கும் வீடியோ இதோ...

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகன் முதல் விமர்சனம் : விஜய்யின் மாஸ் விருந்து டேஸ்டா? வேஸ்டா?
கல்யாணி என் தங்கச்சி... நாங்க ட்வின்ஸ்; முத்துவிடம் புது குண்டை தூக்கிபோட்ட ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்