தலைவர் பிறந்தநாளில் 'அண்ணாத்த' பற்றிய அப்டேட் கொடுத்த இயக்குனர் சிவா..! வீடியோ...

Published : Dec 12, 2020, 11:40 AM IST
தலைவர் பிறந்தநாளில் 'அண்ணாத்த' பற்றிய அப்டேட் கொடுத்த இயக்குனர் சிவா..! வீடியோ...

சுருக்கம்

​​'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

​​'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில்,  உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

கடந்த மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் திரைப்பட ஷூட்டிங்கிற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பங்கேற்க வேண்டாம் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ஆனால் ஜனவரியில் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு, சட்டமன்ற தேர்தலிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அண்ணாத்த படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிக்க வேண்டியுள்ளன. எனவே வரும் டிசம்பர் 15ம் தேதி முதல்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "அண்ணாத்த" படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்காக சென்னை டூ ஐதராபாத் தனி விமானத்தில் பறக்க திட்டமிட்டுள்ளாராம் ரஜினிகாந்த். படப்பிடிப்பு தளத்தைப் பொறுத்தவரை கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் படக்குழுவினர் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 40 நாட்களுக்கு ரஜினி ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாகவும், இடையில் ஓய்வெடுப்பதற்காக சென்னை வந்து திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, 'அண்ணாத்த' படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தலைவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பின், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு துவங்க உள்ளதை அறிவித்துள்ளார்.

அந்த வீடியோ இதோ... 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
அய்யோ, அதை நினைச்சா…இப்போ வரைக்கும் கஷ்டமா இருக்கு; தான் செய்தது ரொம்ப பெரிய தவறு; மனம் திறந்த கேப்ரியல்லா!