ரஜினிகாந்த் பிறந்தநாள்... ஆசையாய் வந்தும் தலைவர் வீட்டில் இல்லாததால் கவலையில் திரும்பும் ரசிகர்கள்..!

Published : Dec 12, 2020, 10:01 AM ISTUpdated : Dec 12, 2020, 10:04 AM IST
ரஜினிகாந்த் பிறந்தநாள்...  ஆசையாய் வந்தும் தலைவர் வீட்டில் இல்லாததால் கவலையில் திரும்பும் ரசிகர்கள்..!

சுருக்கம்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறார். இவருக்கு இரவு 12 மணி முதலே பல ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறார். இவருக்கு இரவு 12 மணி முதலே பல ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டின் முன், ரஜினியை சந்திக்க வேண்டும் என பல ரசிகர்கள் உட்சாகத்தோடு கூடியுள்ளனர். மேலும் இரவு 12 மணிக்கு ரஜினியின் ரசிகர்கள் அவரது வீட்டு முன் கேக் வெட்டி வழக்கம் போல் தலைவர் பிறந்தநாளை ஜமாய்த்தனர்.

அதே போல், ரஜினிகாந்தின் பெயரில் காலை முதலே பல்வேரு  கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்து கொண்டு வருகிறது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என்று அறிவித்துள்ளதால் அவர் மீது கூடுதல் கவனமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசையாசையாக ரஜினியை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் அவர் வீட்டு முன்பே கூடினாலும், அவர் வழக்கம் போல் பிறந்தநாள் அன்று வீட்டில் இல்லாததால் சோகத்துடன் ரசிகர்கள் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.  
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
அய்யோ, அதை நினைச்சா…இப்போ வரைக்கும் கஷ்டமா இருக்கு; தான் செய்தது ரொம்ப பெரிய தவறு; மனம் திறந்த கேப்ரியல்லா!