அடக்கொடுமையே... பிரபல இயக்குநர் உயிரை காவு வாங்கிய கொரோனா... கண்ணீரில் திரையுலகம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 11, 2020, 7:49 PM IST
Highlights

 தற்போது அந்த பட்டியலில் பிரபல தென் கொரிய இயக்குநர் கிம் கி டுக் சேர்ந்துள்ளது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 
 

2020ம் ஆண்டு திரையுலகின் பல தன்னிகரற்ற ஆளுமைகளை கொரோன மூலமாக காவு வாங்கி வருகிறது. திரையுலகினருக்கு கொரோனா தொற்று உறுதியாவதும், அதில் சிலர் இறந்து போவதும் ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த பட்டியலில் பிரபல தென் கொரிய இயக்குநர் கிம் கி டுக் சேர்ந்துள்ளது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

1960ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்திருந்த கிம் கி டுக் இன்னும் சில தினங்களில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்தார். ‘சமாரிடன் கேர்ள்’, ‘3 அயர்ன்’, ‘ஒன் ஆன் ஒன்’ உள்ளிட்டப் படங்களின் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்தவர்.பெர்லின் சர்வதேச திரைப்பட விழா, வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா, கான்ஸ்  விழாக்களில் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தவர். 

லட்வியா என்ற நாட்டில் வீடு வாங்க சென்ற கிம் அடுத்தடுத்தடுத்த சந்திப்புகளுக்கு வராது சந்தேகத்தை ஏற்படுத்தவே அவருடைய நண்பர்கள் தேடல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிம் கி டுக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.20 மணிக்கு கிம் கி டுக் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

click me!