அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்: 'வேற்று மொழியில் எதுக்கு' வைரலாகும் அஜித்தின் பாடல் வரிகள்!

Published : Aug 19, 2021, 05:37 PM IST
அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்: 'வேற்று மொழியில் எதுக்கு' வைரலாகும் அஜித்தின் பாடல் வரிகள்!

சுருக்கம்

இந்து கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை நடக்கும் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில் பலர் இதற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்,  அஜித்தின் பாடல்  வரிகள் தற்போது வைரலாகி வருகிறது.  

இந்து கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை நடக்கும் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில் பலர் இதற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்,  அஜித்தின் பாடல்  வரிகள் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த மாதம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இன்றி தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் துவங்கப்படும், என்றும் அதற்கு ஆரம்ப கட்டமாக சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், முதன் முதலாக 'அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்படும்' என அறிவித்திருந்தார். 

தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்படும் கோவில்களில்,  'அன்னை தமிழில் அர்ச்சனை' என்ற பலகை வைக்கப்பட்டு, அதில் அர்ச்சகரின் பெயர் மற்றும் அவர் குறித்த விவரங்களும் இடம் பெரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இவரது இந்த அறிவிப்புக்கு அனைத்து மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

மேலும் ஆகஸ்ட்-3-ஆம் தேதி, கபாலீஸ்வரர் கோவிலில் 'அன்னை தமிழில் அர்ச்சனை' என்ற பதாகையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த திட்டம் முதல்கட்டமாக 47 கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திட்டம் நடைமுறை படுத்த பட்டத்தை தொடர்ந்து அஜித்தின் ரசிகர்கள், அவரது பழைய படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை தற்போது வைரலாகி வருகிறார்கள்.

அஜித் நடிப்பில் கடந்த 2007  ஆம் ஆண்டு வெளியான 'பில்லா' படத்தில் இடம்பெற்ற சேவல் கொடி பறக்குதடா... சேர்ந்து இடி இடிக்குதடா.... படத்தில் இடம்பெற்ற சில வரிகளை தான் தற்போது 'அன்னை தமிழில் அர்ச்சனை' திட்டத்துடன் ஒப்புட்டு அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.  அதாவது இந்த 

"ஏறுமலை ஏறு எங்க அண்ணன் அழகைபாரு
ஆறுமுகம் யாரு நம்ம நண்பந்தானே குரு
தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு"

என்று பாடலாசிரியர் பா.விஜய் எழுதி, யுவன் சங்கர் ராஜ இசையில், விஜய் யேசுதாஸ் பாடிய பாடல்கள் தான் செம்ம வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Reshma Pasupuleti : குட்டி கவுனில் பார்க்க பார்க்க ரசிக்கத் தோனும் லுக்கில் ரேஷ்மா பசுப்புலேட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்
Sanam Shetty : அநியாய கவர்ச்சி.. சனம் ஷெட்டியின் வேற லெவல் கிளாமர் போட்டோஸ்..