ட்ரிகர் பண்ணும் சுரேஷ்... விடாமல் வம்பிழுக்கும் அனிதா? இந்த வாரம் குறும்படம் கன்ஃபாம் போல..!

Published : Oct 07, 2020, 03:42 PM IST
ட்ரிகர் பண்ணும் சுரேஷ்... விடாமல் வம்பிழுக்கும் அனிதா? இந்த வாரம் குறும்படம் கன்ஃபாம் போல..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, ஒரு வாரத்திற்கு பிறகு தான்.. பிரபலங்கள் ஒவ்வொருவராக தங்களுடைய சுய ரூபத்தை வெளிப்படுத்த, பிரச்சனைகள் சூடு பிடிக்கும். ஆனால் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் இருந்தே சண்டை சூடுபிடித்துள்ளது.  

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, ஒரு வாரத்திற்கு பிறகு தான்.. பிரபலங்கள் ஒவ்வொருவராக தங்களுடைய சுய ரூபத்தை வெளிப்படுத்த, பிரச்சனைகள் சூடு பிடிக்கும். ஆனால் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் இருந்தே சண்டை சூடுபிடித்துள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில், பெரிய பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்பட்ட விஷயம் சப்புன்னு முடித்தாலும், இதே பிரச்சனை இன்றும் சுரேஷ் மற்றும் அனிதா சம்பத்திற்கு இடையே தொடர்கிறது.

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், சோம் சேகரிடம் ’அவர் நியூஸ் ரீடர் என்று கூறவில்லையாம், நான் ஒரு வார்த்தையை அதிகமாக கூறிவிட்டேனாம், அவர் நியூஸ் ரீடர் என்று சொல்லவில்லை என்றே வைத்து கொள்வோம், ஆனால் எச்சில் தெறிக்கும் என்று சொன்னது உண்மைதானே.

ஆனால் அவர் சொன்னதை மக்கள் மறந்துவிடுவார்கள், நான் ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா சொன்னதை தான் பிடித்துவிடுவார்கள். எனக்கு இது தேவையில்லாத கெட்ட பெயர். எனக்கு கெட்ட பெயர் கிரியேட் பண்ண வேண்டும் என தன்னை வைத்து ட்ரிகர் செய்கிறார். அதுமட்டுமல்ல, அவருக்கு புரோமோவுல வரணும், நீங்க அவருக்கு நிறைய புரமோ போடுங்க பிக்பாஸ்’ என்று கேமிராவை பார்த்து அனிதா கூறுவதுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்கு வந்துள்ளது. 

எனவே இந்த பிரச்சனை தற்போதும் முடியாது போல... இன்று மீண்டும் இவர்களுக்கு இடையே இந்த பிரச்சனை வந்துள்ளதால், இந்த வாரம் கண்டிப்பாக கமல் குறும்படம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை... 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்