பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்.. அனிதா சம்பத் கடைசியாக போட்ட உருக்கமான பதிவு!

Published : Oct 05, 2020, 06:25 PM IST
பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்.. அனிதா சம்பத் கடைசியாக போட்ட உருக்கமான பதிவு!

சுருக்கம்

நேற்று துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக, பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்திருப்பவர் பிரபல செய்தி வாசிப்பாளரும் , தொகுப்பாளருமான அனிதா சம்பத்.

நேற்று துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக, பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்திருப்பவர் பிரபல செய்தி வாசிப்பாளரும் , தொகுப்பாளருமான அனிதா சம்பத். இவர் 'எந்திரன்' உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் படங்களில் கூட செய்திவாசிப்பாளராகவே தோன்றியுள்ளார்.

இவருடைய அழகிற்கும், திறமைக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். பார்க்க செம்ம ஸ்டைலிஷ் பெண்ணாக இருந்தாலும் தமிழை அழுத்தம் திருத்தமாக படிக்க கூடியவர்.

இந்நிலையில் இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, திருமணம் செய்து கொண்டபின் பலர் செய்த அட்வைஸ் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய கணவரை கட்டி பிடித்தபடி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இதில் அவர் கூறியுள்ளதாவது, திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்..

ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது..

பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்..


.
Cute ஆன "DREAM GIRL" ah இருக்குறத விட..நல்லத சொல்ற
"DREAM அக்கா"வாவோ
"DREAM தங்கை"யாவோ இருப்பதையே விரும்புறேன்..!!
.
திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!