தீபாவளிக்கு கிடைக்க போகும் நயன்தாராவின் தரிசனம்..! ஓடிடியில் வெளியாகும் 'மூக்குத்தி அம்மன்'..!

By manimegalai aFirst Published Oct 5, 2020, 1:15 PM IST
Highlights

ஆர்.ஜே.பாலாஜி , என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடிக்க விரதம் எல்லாம் இருந்தார். எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. 
 

ஆர்.ஜே.பாலாஜி , என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடிக்க விரதம் எல்லாம் இருந்தார். எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. 

கொரோனா பிரச்சனை ஆரம்பிக்கிறது முன்னாடியே கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழுவினர் நடத்தி முடித்துவிட்டனர். படத்தை பற்றி ஏற்கனவே மெளனம் கலைந்த ஆர்.ஜே.பாலாஜி, மூக்குத்தி அம்மன் கதை நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்படும் கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று குறிப்பிட்டிருந்தார். 

மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவினர் இரண்டு போஸ்டர்களை ரிலீஸ் செய்திருந்தனர். 

முழுக்க முழுக்க அம்மனாகவே காட்சி தந்த நயன்தாராவின் செகண்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது குறிப்பிடத்தக்கது. சிலர் நயன்தாரா அம்மன் கெட்டப்பிற்கு பொருத்தமாகவே இல்லை என்றும், அம்மன் ஏன் பயந்த மாதிரி இருக்கு என்று கலாய்த்திருந்தனர். 

இந்நிலையில் படிப்படியாக அரசு 5 கட்ட தளர்வையும் அறிவித்து, வரும் 15 ஆம் தேதி முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன். திரையரங்குகளை ஓப்பன் செய்யலாம் என கூறியது. எனினும் கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் வராததால், திரையரங்குகள் திறக்க பட்டாலும் பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனால் தொடர்ந்து பல படங்களை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படமும் இணைந்துள்ளது. வரும் தீபாவளிக்கு ஹாட்ஸ்டார் ஓடிடியில் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தீபாவளிக்கு அம்மனாக தரிசனம் தர உள்ள நயன்தாராவை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் கார்த்திருக்கின்றனர். 

click me!