
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி காம்பினேஷனில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா பிரச்சனையால் படம் இன்னும் வெளியாகவிட்டாலும், அவ்வப்போது அப்டேட்டுக்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அனிருத்திற்காக ‘மாஸ்டர்’ டீம் ஒரு ஸ்பெஷல் விஷயத்தை அறிவித்திருந்தனர்.
அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தில் வரும் க்விட் பண்ணுடா பாடலின் லிரிக்கல் வீடியோ மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.இதையடுத்து காலை முதலே விஜய் ரசிகர்கள் க்விட் பண்ணுடா பாடல் பற்றியும், மாஸ்டர் படம் பற்றியும் விதவிதமான ஹேஷ்டேக்குகளை வைரலாக்கி வந்தனர்.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர்... இந்த புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?
ஏற்கனவே அறிவித்திருந்த படி சரியாக மாலை 6 மணிக்கு க்விட் பண்ணுடா என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அனிருத் குரலில் அவர் இசையமைத்துள்ள என் ஜீவனே, என் போதையே, நீ போதும் என்று தோன்று நேரம் தான் என துவங்கும் லிரிக்கல் வீடியோ ரசிகர்களுக்கு மிகவும் கவர்ந்துள்ளது. இதையடுத்து #QuitPannuda #Thalapathyvijay ஆகிய ஹேஷ்டேக்குகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ லிரிக் வீடியோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.