
பிக்பாஸ் வீட்டில், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளே வந்த போது... பாவம் இவருக்கே வயசு ஆகிட்டு என்ன பண்ண போறாரு, வழக்கம் போல், வந்த வேகத்தில் சென்று விடுவார் என்பது தான் பலரது நினைப்பாங்க இருந்தது. ஆனால் இரண்டாவது நாளிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாகியது என்றால் அது இவரும் அனிதாவும் சமையல் அறையில் முட்டிக்கொண்டது தான்.
இந்த சண்டையை விடாப்பிடியாக சவ்வு மாதிரி இழுத்து கொண்டிருந்தார் அனிதா. இருந்தாலும் அதையெல்லாம் அசால்ட் செய்து விட்டு, தல அனைவரிடத்தியும் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்து வைத்துள்ளார்.
இது ஒரு கேம் அதை தான் நான் விளையாடுகிறேன், நீங்கள் என்னை எவ்வளவு கோபப்படுத்தினாலும் வேஸ்ட் என, முதிர்ச்சியான இவருடைய பதிலும் இருந்தது. இவரின் தந்திரங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்தது.
இந்நிலையில் இவர் இன்று கேப்ரில்லாவுக்காக தனி ஆளாக நின்று, விளையாடிய புரோமோவை பார்த்த போது, இவர் மீது மக்களுக்கு மட்டும் அல்ல பல பிரபலங்களுக்கும் தனி மரியாதையே வந்து விட்டது. அந்த வகையில், சிவாஜி கணேசனின் பேரனும் , பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளருமான சுஜா வருணியின் கணவர் சிவகுமார் சுரேஷை தாறு மாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார். வேல்முருகன் பற்றியும் இவர் கூறியுள்ளது உண்மை என்றே நினைக்க தோன்றுகிறது.
சுரேஷ் சக்ரவர்த்தி வேற ரகம் !!! தலைவர் உண்மையிலேயே வேற மாறி !!! வேற லெவல்!! இவர் மட்டும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சுவாரஸ்யமான போட்டியாளர்!! என்று கூறி, வேல்முருகன் சனம் ஷெட்டிக்கு கட்டி பிடி வைத்தியம் செய்கிறாரா என கேட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.