
இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன் தயாரிப்பில், வெளியாகியுள்ள குறும்படம் 'மா' இந்த குறும்படத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே கர்பமாகும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் அணிக்ஹா.
இவர் ஏற்கனவே கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில், அஜித்துக்கு மகளாக நடித்தார்.
இவர் நடிப்பில் வெளியாகியுள்ள 'மா' குறும்படம் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
கதை:
அப்பா கல்லூரி விரிவுரையாளர், அம்மா நூலகத்தில் வேலை செய்பவர், மிகவும் கண்டிப்பானவர்... பெண்ணின் ஆசை அறிந்து நடக்கும் தாய். அணிக்ஹா 10 வகுப்பு படிக்கும் மாணவி. போர்டு எக்ஸாம் போன்ற பல கல்வி சுமைகள் இருந்தும் மகளுக்கு ஹாக்கி பிடிக்கும் எனத் தெரிந்து அவரை ஹாக்கி விளையாட அனுமதிக்கும் தாய்.
அணிக்ஹா ஹாக்கி விளையாடிக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுகிறார். இவர் மயங்கி விழக் காரணம் உடலில் பலம் இல்லை என நினைத்து அணிக்ஹாவின் மாஸ்டர் சத்தான உணவு கொடுக்கும் படி அவருடைய அம்மாவிடம் கூறுகிறார்.
வீட்டிற்கு சென்றதும் வாந்தி எடுக்க... உடனே அணிக்ஹாவின் அம்மா வா மருத்துவமனைக்கு செல்லலாம் என கூறி மருத்துவ மனைக்கு கிளம்ப தயாராகிறார்.
பல்வேறு குழப்பங்களுக்கு இடையே அணிக்ஹா தான் கர்பமாக இருப்பதாக நினைக்கிறன் என மருத்துவமனைக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் அம்மாவிடம் கூற, ஒரு நிமிடம் அவருடைய அம்மவிக்கு உலகமே இருள்கிறது. பெண்ணை அடிக்கிறார்,ஆத்திரத்தில் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார் என்ன செய்வது என்கிற குழப்பத்தில் உறைகிறார்.
சாமர்த்தியமான தாயாக:
ஒரு கட்டத்தில் தவறு நடந்து விட்டது அடுத்து இதை எப்படி சமாளிக்கலாம் என யோசிக்கும் அவர் பெண்ணிடம் இது குறித்து பேசுகிறார். பெண்ணின் காதலனிடமும் இது குறித்து பேசுகிறார்.
இவர்கள் இருவருக்கும் காதல் இல்லை, இனக்கவர்ச்சி மூலம் இந்த தவறு அவர்களே அறிமாமல் செய்தது என உணர்ந்து தன்னை சமாதன படுத்திக்கொள்கிறார்.
அணிக்ஹவின் தாய்மை
10 ஆம் வகுப்பு பெண் கர்ப்பமாக இருந்து குழந்தை பெற்றுக்கொண்டால் என்ன பின் விளைவுகள் வரும் என்று எதுவும் தெரியாமல், அம்மாவிடம் வந்து அம்மா எனக்கு தம்பி பாப்பா இல்ல இந்த பாப்பாவ ஏன் நம்ப வசிக்க கூடாது என்பதிலும், சுடிதார் எனக்கு ரொம்ப டைட்டா ஆகிடுச்சிமா இல்ல, என குழந்தை தனமாக தன்னுடைய தாய்மை வெளிபடுத்தியுள்ளார் அணிக்ஹா.
சிறந்த அம்மா:
தன்னுடைய பெண் தெரியாமல் இப்படி ஒரு தவறை செய்துவிட்டதை அறிந்த அம்மா, அவரிடம் இந்த குழந்தை வேண்டாம் என கூறி புரிய வைத்து, ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள குடும்பத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை வேண்டும் என புரிய வைத்து அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று கர்பத்தை கலைக்க வைக்கிறார். அப்போது மருத்துவரிடம் டாக்டர் பாத்து வலிக்காம என கூறி தன்னுடைய பெண்ணின் மேல் உள்ள பாசத்தை வெளிபடுத்தியுள்ளார்.
நம்பிக்கை:
தன்னுடைய பெண் மீது நம்பிக்கை வைத்து. நீ செய்த தவறை நினைத்து இனி வீட்டில் முடங்கி கிடக்க கூடாது என கூறி அணிக்ஹாவிற்கு பிடித்த விளையாட்டான ஹாக்கி தளத்திற்கு கொண்டு வந்து விடுகிறார். அங்கு அணிக்ஹாவின் கர்பதிற்கு காரணமான மாணவரும் உள்ளார்.
இருப்பினும் உன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என கூறி சிறந்த அம்மாவாக அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் 'மா'..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.