ஆண்ட்ரியாவை வளைத்து வளைத்து லிப் டூ லிப் கிஸ் அடித்த ‘ஜில் ஜங் ஜக்’ நாயகன்! கிளுகிளுப்பாக இருக்குமா அவள்...

 
Published : Oct 12, 2017, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
ஆண்ட்ரியாவை வளைத்து வளைத்து லிப் டூ லிப் கிஸ் அடித்த ‘ஜில் ஜங் ஜக்’ நாயகன்! கிளுகிளுப்பாக இருக்குமா அவள்...

சுருக்கம்

Andrea Jeremiah locks lips with Siddharth for Aval

‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு பிறகு சத்தமே இல்லாமல் சித்தார்த் தயாரித்து நடித்து வந்த படம் ‘அவள்’. திகில் படமான இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. 

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை மிலிண்ட் ராவ் இயக்கியுள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் காட்சி திரையிடப்பட்டது. திகில் காட்சிகள் நிறைந்த டிரைலர் மிரட்டோ மிரட்டு என்று மிரட்டினாலும், அதன் பிறகு திரையிடப்பட்ட பாடல் காட்சி வேறு விதத்தில் கிளுகிளுப்பாக்கியது.

அந்த பாடல் காட்சியில், ஆண்ட்ரியாவை வளைத்து வளைத்து சித்தார்த் லிப் டூ லிப் முத்தத்தை கொடுக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, அடிக்கடி ஆண்ட்ரியாவின் உதடை கவ்வியவாறே பாட்டு முழுவதும் நடித்திருக்கும் சித்தார்த், இந்த விஷயத்தில் கமல்ஹாசனையும் மிஞ்சிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

‘ஹர ஹர மஹாதேவகி’ போன்ற அடுல்டு காமெடி படங்கள் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், சித்தார்த் – ஆண்ட்ரியாவின் இந்த லிப் டூ லிப் முத்த மழை பாடல், ‘அவள்’ படத்தை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் கருவியாக இருக்கும் என்பது நிச்சயம். ஹாலிவுட் படங்கள் பல மக்களை பயமுறுத்தும் அளவிற்கு இருக்கும். 

ஆனால், இந்தியப் படங்கள் அந்த அளவிற்கு இல்லை. இந்தியாவே பயப்படும் அளவிற்கு ஒரு படம் எடுக்க நினைத்தேன். அது தான் 'அவள்' படமாக உருவாக்கி இருக்கிறேன் என்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!