திட்டுவாங்க தான் எனக்கு சம்பளம் கொடுக்குறீங்களா? நிகழ்ச்சியின் நடுவே சண்டை போட்ட ரியோ! வீடியோ !

Published : Jan 04, 2019, 12:42 PM IST
திட்டுவாங்க தான் எனக்கு சம்பளம் கொடுக்குறீங்களா? நிகழ்ச்சியின் நடுவே சண்டை போட்ட ரியோ! வீடியோ !

சுருக்கம்

தமிழில் பல என்டர்டெயன்மென்ட் நிகழ்ச்சிகள் கொடுத்து பிரபலமானது விஜய் தொலைக்காட்சி.  இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல், ஆடல், பாடல், காமெடி நிகழ்ச்சிகளுக்கு என அனைத்திற்குமே... ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.  

 தமிழில் பல என்டர்டெயன்மென்ட் நிகழ்ச்சிகள் கொடுத்து பிரபலமானது விஜய் தொலைக்காட்சி.  இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல், ஆடல், பாடல், காமெடி நிகழ்ச்சிகளுக்கு என அனைத்திற்குமே... ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடிகராக பிரபலமானவர் தொகுப்பாளர் ரியோ.  தற்போது "Ready study Po " என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அதிகப்படியாக பெண்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது 2 பெண்களிடம் பெண்களிடையே போட்டி நடத்தப்பட்டது. குறிப்பிட்ட டாஸ்க் தன்னால் செய்ய முடியாது என ஒரு பெண் புறக்கணிக்க, எதிர் தரப்பில் விளையாடிய பெண் விளையாட்டு என்றால் விளையாடிதான் ஆக வேண்டும் என குரலை உயர்த்தி பேசினார். 

இதனால் இரு பெண்களிடமும் சண்டை வருகிறது. இவர்களிடம் நடக்கும் சண்டை சமாதானம் செய்யப்போன, ரியோவை போட்டியாளர் பெண் தாக்கி பேசியதால் என்னவோ கோபமடைந்த ரியோ...  நிகழ்ச்சியிலேயே திடீரென இதற்கு யார் கோ-ஆர்டினேட்டர் ? இவர்களிடம் திட்டுவாங்க தான் சம்பளம் கொடுக்குறீங்களா? என மிகவும் கோபமாக கத்தும் காட்சி ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

 இது உண்மையான சண்டையா?  இல்லை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை கலாய்ப்பதற்காக போடப்பட்ட சண்டை என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!