
சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜே அஞ்சனா.
இவர் கடந்த 2016 ஆண்டு, கயல் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான கதாநாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தை தொடர்ந்தும், சின்னத்திரை நிகழ்சிகள் மற்றும் வெள்ளித்திரை பட விழாக்களை தொகுத்து வழங்கி வந்த இவர், கடந்த ஆண்டு திடீர் என தனக்கு சிறு இடைவெளி தேவைப்படுவதாகவும், இனி முழு நேரம் தன்னுடைய குடும்பத்தை கவனித்துக்கொள்ள போவதாக தெரிவித்து விட்டு சின்னத்திரையில் இருந்து விலகினார்.
பிறகு தான் தெரிந்தது இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் சின்னத்திரையில் இருந்து விலகினார் என்று...
இந்நிலையில் இவருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக, இவருடைய கணவர் கயல் சந்திரன் தன்னுடைய ட்விட்டர் பகுதியின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதனால் பல ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும், தொடர்ந்து அஞ்சனா மற்றும் கயல் சந்திரன் இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.