ஊரடங்கால் சீரியல்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! "அன்புடன் குஷி' சீரியலில் இனி இவர் தான் ஹீரோயின்!

Published : Jun 17, 2020, 07:07 PM IST
ஊரடங்கால் சீரியல்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! "அன்புடன் குஷி' சீரியலில் இனி இவர் தான் ஹீரோயின்!

சுருக்கம்

உலகம் நாடுகளை கடந்து, தற்போது தமிழகத்தை பெருமளவு அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே, அணைத்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடங்கியது. குறிப்பாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெப்சி தொழிலாளர்கள் மற்றும் பல கூலி தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.  

வேலையின்றி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி, கடந்த 10 ஆம் தேதி முதல், முழு பாதுகாப்புடன், 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் துவங்க தமிழக அரசு அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, தற்போது சீரியல் பணிகள் சூடுபிடித்துள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் 'நாயகி' சீரியலில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது விஜய் டிவி சீரியலில் ப்ரஜின் நடித்து வரும் 'அன்புடன் குஷி ' சீரியல் நடிகையும் மாற்ற பட்டுள்ளார்.  

ஃபேஷன் டிசைனராக ஆசை படும் ஒரு பெண், மேலும் படிக்க துடிக்கும் ஒரு பெண் தன்னுடைய குடும்ப பாரம்பரிய முறைகளால் அடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலையில், அதை விட்டு அவர் எப்படி வெளியே வருகிறார் என்பது தான் இந்த சீரியலின் கதை. இதில், சின்னத்தம்பி சீரியலுக்கு பின் மீண்டும் விஜய் டிவியில் நடிகர் பிரஜன் ஹீரோவாக நடித்து வருகிறார். 

குஷி வேடத்தில் மான்சி ஜோஷி நடித்து வந்தனர். இந்நிலையில் மான்ஷி ஜோஷிக்கு பதில்  வேறு ஒருவர் ஹீரோயின் நடிக்கப் போவதாக இந்த தொடரில் நடிக்கும் நடிகர் அரவிந்த் புகைப்படம் மூலம் வெளியிட்டுள்ளார். இதனால் ஊரடங்கிற்கு பின்னர் சீரியல்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
டிஸ்சார்ஜ் ஆகும் ஈஸ்வரி... களத்தில் இறங்கி சம்பவம் செய்ய தயாராகும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்