
முன்னணி நடிகராக சுஷாந்த் வளர்ந்து வருவதற்கு முட்டுக்கட்டை போட்ட பாலிவுட் திரையுலகம் குறித்து, வெளியாகும் தகவல்கள் இந்தி திரையுலகின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இப்படி வெளியாகி வரும் தகவல்களை வைத்து பார்க்கும் போது, கோலிவுட் திரையுலகம் எவ்வளவோ மேல் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சின்னத்திரையில் இருந்து, வெள்ளி திரைக்கு வந்தாலும், தாராள மனதுடன் அவரை வரவேற்று, அவர்களின் நடிப்பு திறமையை அங்கீகரித்து முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்க வைத்து வருகிறது கோலிவுட் திரையுலகம்.
குறிப்பாக, அணைத்து திரையுலகம் போல் ஒரு சில கிசுகிசுக்கள் கோலிவுட் திரையுலகிலும் இருந்தாலும், வளர்ந்து வரும் ஒரு நடிகரை மேடைக்கு அழைத்து அசிங்கப்படுத்தியது இல்லை.
ஆனால் பாலிவுட் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் ஷாருகான் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோர், சுஷாந்த் சிங்கை விருது விழா மேடைக்கு அழைத்து, அவரை கிண்டல் செய்வது போல் பேசி நோகடித்த போது, என்ன செய்வது என புரியாமல் அவர் தயங்கி நின்ற சில காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகம் பற்றி ஏற்கனவே நடிகர் கமல் ஆர் கான் தெரிவித்தது போல், 6 பிரபலங்கள் கைப்பிடியில் மட்டுமே உள்ளது என்று அவர் கூறியதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று நன்றாக புரிவதாக தெரிவித்து வருகிறார்கள். அதே போல் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், தொடர்ந்து வாரிசு நட்சத்திரங்களை மட்டுமே ஊக்கு வித்து, வெளி நடிகர்களை புறக்கணித்து வருவதையும் விமர்சித்து வருகிறார்கள்.
வைரலாகி வரும் அந்த காட்சி இதோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.