“இதை செய்தாலே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்”... முதலமைச்சருக்கு இயக்குநர் சேரன் வைத்த அதிரடி கோரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 17, 2020, 5:33 PM IST
Highlights

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடிவருகிறது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் மட்டும் 34 ஆயிரத்து 245 பேர்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18,565 பேர் குணம் அடைந்துள்ளனர். 15,257 பேர் கொரோனா பாதிப்புடன் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து தீயை விட வேகமாக பரவும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கத்துடன் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: அதிரடி முடிவெடுத்த த்ரிஷா... ரசிகர்களுக்கு இப்படியொரு அதிர்ச்சி கொடுக்க காரணம் இதுவா?

மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கார் கூட வேண்டாம் பைக் இருந்தாலே போதும் சொந்த ஊருக்கு போய்விடலாம் என குடும்பம், குடும்பமாக கிளம்புகின்றனர். இப்படி முறையான இ-பாஸ் இல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு செல்வோரை கண்காணிப்பதற்காக சென்னையின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 

 

இதையும் படிங்க: 

தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரையும் டேக் செய்துள்ள சேரன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.“அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பயமும் கொரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கி கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம். எனவே சென்னையில் கொரொனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி சென்னையில் வாழும் நோய்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும்.. அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து”.

 

இதையும் படிங்க: 

“மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்களை உயிரோடு வைத்துக்கொள்ள அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள்.. அது நியாயமும் கூட.. அதற்காக முறையே யோசித்து செயலாற்றவேண்டியது தங்களின் கடமையாகும்” என நினைவூட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 
 

click me!