ராம்சரண் உடன் சேர்ந்து ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்ட ஆனந்த் மஹிந்திரா

நாட்டு நாட்டு பாடலின் பேமஸான ஹூக் ஸ்டெப்பை எவ்வாறு ஆட வேண்டும் என நடிகர் ராம்சரணிடம் இருந்து ஆனந்த் மஹிந்திரா கற்றுக்கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

anand mahindra learns RRR movie Naatu Naatu song hook step from Ramcharan

ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் இணைந்து நடித்திருந்த இப்படம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலை வாரிக்குவித்ததோடு, விருதுகளையும் தொடர்ந்து வென்று வருகிறது. சமீபத்தில் கூட இப்படத்திற்காக கீரவாணி இசையமைத்திருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது.

அதுமட்டுமின்றி உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்று உள்ளது. இதனிடையே ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராம்சரணை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அவரிடம் நாட்டு நாட்டு பாடலின் பேமஸான ஹூக் ஸ்டெப்பை எவ்வாறு ஆட வேண்டும் என்று கற்றுக்கொண்டார்.

Latest Videos

இதையும் படியுங்கள்... அதென்ன லேடி சூப்பர்ஸ்டார்.. யாரையும் அப்படி கூப்பிடாதீங்க! மாளவிகா மோகனன் பேச்சால் கடுப்பான நயன்தாரா ரசிகர்கள்

இதுகுறித்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, நாட்டு நாட்டு பாடல் ஸ்டெப்பை கற்றுத்தந்ததற்கு நன்றி ராம்சரண். ஆஸ்கர் வெல்ல வாழ்த்துக்கள் நண்பா” என வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளதோடு, 50 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகளையும் குவித்துள்ளது.

Ji you got the move faster than I did.. Was a super fun interaction.
Thank you for your wishes for team🙏🏼❤️

— Ram Charan (@AlwaysRamCharan)

ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவுக்கு நடிகர் ராம்சரணும் ரிப்ளை செய்துள்ளார். அதில், ஆனந்த் ஜி நீங்கள் என்னைவிட அந்த நடன அசைவுகளை வேகமாக செய்தீர்கள். உங்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். ராம்சரணை போல் ஏராளமான ரசிகர்களும் ஆனந்த் மஹிந்திராவின் நடனத்தை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... என்ன மனுஷன் யா! ஏகே 62-வில் இருந்து நீக்கிய பின்னும்... அஜித் மீதுள்ள அதீத அன்பை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்

vuukle one pixel image
click me!
vuukle one pixel image