மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!

 
Published : Mar 26, 2018, 05:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!

சுருக்கம்

amutha music thirillar movie

“சதர்ன் ஃப்லிம் ஃபேக்டரி” சார்பாக “சஃபீக்” தயாரிப்பில் பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும்  திரைப்படம் “அமுதா”. திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட “மியூக்கல்-திரில்லர்” படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயா ஸ்ரீ நடிக்கிறார். இவருடன் அனீஸ் ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார்.

“அமுதா” திரைப்படத்திற்கான கதையை 2016 -ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.அர்ஜுன்.  “அமுதா” படத்திற்கான கதையை எழுதத் தொடங்கும் போது ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே எழுதி இருக்கிறார். பிறகுதான் படத்திற்கான மொத்த கதையையும் எழுதி இருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “இயக்குநர் மணிரத்னம் அவர்களின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘அமுதா’ என்கிற பெயரைத்தான் இப்படத்திற்கான தலைப்பாக வைத்திருக்கிறோம். காரணம், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் சாதாரணமாக இல்லாமல், இதற்கு முன்பே நன்கு அறியப்பட்ட பெயராக இருக்க வேண்டும் என விரும்பினோம்”, என்றார்.

மேலும் இது பேய்ப்படமா? என்ற கேள்விக்கு, “நிச்சயமாக இது பேய்ப்படம் இல்லை. அதே நேரத்தில் பேய்ப்படத்தில் எந்தளவிற்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ அதை விட அதிகமாகவே இந்தப் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்”, என்றார்.

முழுமையாக படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நிச்சயம் படம் வெளியாகும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!