
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நாட்டில் நடக்கும் பல சம்பவங்களை மையப்படுத்தி கார சாரமான விவாதம் நடைபெறும் அப்படி ஒரு விவாதம் தான் கடந்த 28ஆம் தேதி ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் என்றும் தெரு நாய்களுக்கும் நகரத்தில் உரிமை உள்ளது என்ற தலைப்பு இடம் பெற்றிருந்தது. இந்நிகச்சியில் நடிகை அம்மு ராமச்சந்திரனும் கலந்து கொண்டு பேசினார். ஆனால், அவர் பேசியது தெரு நாய்களுக்கும் நகரத்தில் இடம் உள்ளது என்ற தலைப்பில் அம்மு ராமச்சந்திரன் பேசினார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: அரசு நாய்களை வீட்டில் வைத்திருக்க கூடாது என்று ஆர்டர் போட்டால் அதற்கு என்ன செய்வீர்கள் என்று ஒருவர் கேட்ட போது அதற்கு நாங்கள் நிரூபிக்க முயற்சி செய்வோம். எங்களுடைய நாய் அமைதியாகத்தான் இருக்கிறது. அதற்குரிய தடுப்பூசியும் போடப்பட்டிருக்கிறது என்று கூறிக் கொண்டிருந்த போது இடையில் குறுக்கிட்ட கோபிநாத், நிதானம், முதலில் நன்றாக கவனியுங்கள் என்று அவரை தடுத்து நிறுத்துகிறார்.
மேலும், அவர் உங்களுடைய நாய் பற்றி தான் கேட்டார். அதற்கு தான் நான் விளக்கம் கொடுத்தேன். இதில் நாங்கள் வளர்க்கும் நாய், எங்களுடைய ஏரியாவில் இருக்கும் நாய் என்று எடுத்துக் கொள்ளலாம் என்றார். அதற்கு கோபிநாத் ஏரியாவில் இருக்கும் நாய் எப்படி உங்களுடைய நாய் என்று கேட்க, 4 கால் உள்ள அந்த நாயை எனது குழந்தையாக நான் நினைக்கிறேன். நான் இன்னமும் சிங்கிளாக இருக்கிறேன். அது தப்பா என்று கேட்டார்.
மேலும் நாய் வளர்ப்பதற்கு லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் கூட, அதற்குரிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்க, அதற்கு நாய் பற்றி விழிப்புணர்வுக்கு உங்களது ஏரியாவில் ஒரு கேம்ப் போட்டு அதில் நாய்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்வதற்கும், உங்களைப் பற்றி நாய்கள் புரிந்து கொள்வதற்கும் எத்தனை நாட்கள் ஆகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு ஒரு வருடம் அல்லது 2 வருடம் ஆகும் என்றார்.
உடனே அதற்குள்ளாக நாய் கடியால் பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடுமே என்றார். இப்படியே காரசாரமான விவாதம் நடைபெற்று இந்த நிகழ்ச்சியில் நாய்களுக்கு ஆதரவாக பேசிய அம்மு ராமச்சந்திரனை அதிகளவில் நெட்டிசன்கள் டிரோல் செய்துள்ளனர். இந்தநிலையில் தான் இது குறித்து விளக்கம் கொடுத்து அம்மு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதலில் நீயா நானா நிகழ்ச்சியானது 8 மணி நேரம் எடுக்கப்பட்டது. மேலும், இதனை வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே எடிட் செய்து ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள்.
இதில் உங்களுக்கு மொத்தம் எடுக்கப்பட்ட வீடியோவை முழுவதுமாக பார்த்தால் மட்டுமே உங்களுக்கு உண்மை என்று புரியும். அதுமட்டுமின்றி ஒரு பக்கம் நாய்களை விரும்புகிறோம், தெரு நாய்களை ஆதரிக்கிறோம் என்று சொல்பவர்களும், இன்னொரு பக்கம் வேண்டாம் என்று சொல்பவர்களையும் தான் எடுத்தார்கள். ஆனால், வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் தான் அதிகம். மேலும், நாய்க்கடியால் எங்கெல்லாம் பிரச்சனைகள் நடந்திருக்கிறதோ அங்குள்ளவர்களை தேடி பிடித்து அழைத்து வந்து பேச வைத்தார்கள்.
அவர்கள் பேசுவதை கேட்ட கோபி, இந்த பக்கம் நாய் எதற்காக வேண்டும் என்று சொல்கிறோம் என்பதை அவர் கேட்கவில்லை. எப்போது நாங்கள் பேச ஆரம்பித்தாலும் இல்லை இல்லை பேச வேண்டாம், உங்களுக்கான வாய்ப்பு வரும் போது நீங்கள் பேசலாம் என்றார். மேலும், எங்களது பக்கம் இருந்த அனைவருமே அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள். இது முழுக்க முழுக்க டி ஆர் பிக்காக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி தான். இதனால், தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட போவது நாங்களும், நாய்களும் தான் என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.