இழுத்து மூடி சீல் வைக்கப்பட்ட அமிதாப் பச்சனின் 4 பங்களா..! பீதியில் பணியாளர்கள்..!

Published : Jul 13, 2020, 03:13 PM IST
இழுத்து மூடி சீல் வைக்கப்பட்ட அமிதாப் பச்சனின் 4 பங்களா..! பீதியில் பணியாளர்கள்..!

சுருக்கம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அடிக்கடி சென்று வந்த, நான்கு பங்களா சீல் வைக்கப்பட்டுள்ளது.  

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அடிக்கடி சென்று வந்த, நான்கு பங்களா சீல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய முன் தினம், நடிகர் அமிதாப் பச்சன் “எனக்கு கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றும் எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த 10 நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது.

இதையடுத்து எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் அவரது மகள் ஆகியோருக்கும் சோதனை செய்யப்பட்டதில், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து, ஜெயா பச்சனை தவிர, ஐஸ்வர்யா ராய், மற்றும் அவருடைய மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இருவரும் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டது. மேலும், அவருடைய பங்களாவையே தடை செய்யப்பட்ட இடமாக மாற்றியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், இவர்கள் அடிக்கடி சென்று வந்த மும்பையில் முக்கிய இடங்களில் அமிதாப் பச்சனுக்கு சொந்தமாக, ஜல்சா, பிரதிஷா, ஐனாக், மற்றும் வெஸ்டா ஆகிய படங்களில் அமைந்துள்ள நான்கு பங்களா சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்களுடைய வீட்டில் பணியாற்றிவந்த 30 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர். எனவே என்ன ரிசல்ட் வரும் என அனைத்து பணியாளர்களும் பீதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

29 The Film Review : மேயாத மான் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்