“அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 13, 2020, 01:42 PM ISTUpdated : Jul 13, 2020, 02:28 PM IST
“அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...!

சுருக்கம்

. அதுமட்டுமின்றி தான் தொடர்ந்து ஹெலனுக்கு சப்போர்ட் செய்வேன் என்றும், சட்டப்படி வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற வனிதா விஜயகுமார், சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை பற்றி விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக வனிதாவும் சும்மா இல்லாமல் தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் முத்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து எல்லோரையும் கடுப்பேற்றி வருகிறார்.

அதுமட்டுமின்றி, 7 ஆண்டுகளாக முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்த பீட்டர் பால் திடீர் என  வனிதாவை திருமணம் செய்து கொள்ள பிள்ளைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது, என் புருஷன் எனக்கு வேணும் என சண்டையிட ஆரம்பித்துள்ளார் அவரது முதல் மனைவி ஹெலன் எலிசபெத். இதற்கிடையே ஹெலனுக்கு சப்போர்டாக திரைப்பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களில் தயாரிப்பாளர் ரவீந்தரும் ஒருவர். 

 

இதையும் படிங்க: அஜித்துக்கு வந்த நெருக்கடி...“வலிமை” பட தயாரிப்பாளருக்கு தலயிடம் இருந்து பறந்த இ-மெயில்....!

ஆன்லைன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரவீந்தர், வனிதா திருமணம் செய்தது தவறு இல்லை. முறையாக விவாகரத்து பெறாத நபரை திருமணம் செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். முதலில் அனைத்து பேட்டிகளிலும் திருமணம் எனக்கூறிவிட்டு, பிரச்சனையானதும் இல்ல இல்ல இதுவெறும் நிச்சயதார்த்தம் தான் என சொல்லிவிட்டு, லவ் ஆப் ஷேரிங் என முத்தமிட்டுக்கொண்டதை பார்த்தால் ஒரிஜினல் மனைவிக்கு எப்படி வயிறெரிச்சலாக இருக்கும் என கடும் விமர்சனங்களை முன்வைத்தார். 

ரவீந்தரின் இந்த பேட்டியை பார்த்த வனிதா விஜயகுமார், “என் சொந்த விஷயத்தில் தலையிட நீ யார்?. 3வது கல்யாணம் செஞ்சிக்கிறது, சோசியல் மீடியாவில் போட்டோ ஷேர் பண்றது எல்லாம் என் சொந்த விஷயம். அதில் தலையிட நீ யாரு. பீட்டர் பால் மனைவி ஹெலனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம். என்ன வச்சி பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பாக்குறீயா? உன் மூஞ்சியை எல்லாம் யாருக்கு தெரியும். நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? என சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்தார். 

 

இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியான செய்தி.... கொரோனாவால் சன் டி.வி. எடுத்த அதிரடி முடிவு...!

இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ள ரவீந்தர், வனிதா - பீட்டர் பாலுக்கு எதிராக ஆவேசமாக கருத்துக்களை முன்வைத்துள்ளார். விவாகரத்து வாங்காத நபரை முதல் திருமணம் செய்தது ஏன் என்ற கேள்வியை தான் நான் கேட்டேன். அதற்கு வனிதா நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?, எதுக்கு சாப்பிடுற, உன் உடம்பையும், மூஞ்சியையும் பாரு என தேவையில்லாமல் தரக்குறைவாக என்னை விமர்சித்தார். அதனால் தான் நான் விமர்சிக்க ஆரம்பித்தேன். பீட்டர் பால் மகனின் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கவலை எனக்குள்ளது. பீட்டர் பால் முதல் மனைவியை கேள்வி கேட்க வனிதாவிற்கு உரிமை இருந்தால், அவரை விமர்சிக்க எனக்கு உரிமை உள்ளது. 

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

என்னை பற்றி பேசினால் அமைதியாக இருக்க, நான் ஒன்னும் அவங்க வீட்டு பீட்டர் பால் இல்ல., அப்படி ஒருத்தர் எங்க வீட்டுல இருந்தா அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்' என சகட்டுமேனிக்கு சாடியுள்ளார். அதுமட்டுமின்றி தான் தொடர்ந்து ஹெலனுக்கு சப்போர்ட் செய்வேன் என்றும், சட்டப்படி வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

29 The Film Review : மேயாத மான் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்