
தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் மைய குழு கூட்டம் இன்று அதன் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வரும் 30ந் தேதி வேலைநிறுத்தம் என்று அறிவித்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, ஏற்கனவே முதலமைச்சரை நேரில் சென்று திரை உலக குறைகளை சொன்ன உடனேயே அதிகாரிகளை அழைத்து அதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பித்து விட்டதால், 30ந் தேதி மட்டும் அல்ல வேறு எந்த தேதி யிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் சங்கமும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பும் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் பங்கு பெறமாட்டோம் என்று அறவித்துள்ளது போல் தற்போது தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது என்று அறிவித்துள்ளது.
கூட்டத்தில் தலைவர் அபிராமிராமநாதன், கலைப்புலி எஸ்.தாணு, அன்புசெழியன், சரத்குமார், சேரன், ராதாரவி, எஸ் வீ சேகர், ஜேகே ரித்தீஷ், பன்னீர்செல்வம், கே முரளீதரன், சிவசக்திபாண்டியன், டி சிவா, ஏஎல் அழகப்பன், டிஜி தியாகராஜன், ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, சித்ராலட்சுமணன், கேஎஸ் சீனிவாசன், விஜயகுமார், தனஞ்ஜெயன், பிரமிட் நடராஜன், டாக்டர் சீனிவாசன், சுந்தரேசன், மூர்த்தி உள்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.