ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்... அடித்து கூறும் ஆர்.ஜே.பாலாஜி... 

 
Published : May 21, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்... அடித்து கூறும் ஆர்.ஜே.பாலாஜி... 

சுருக்கம்

rj balji talking about rajnikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் என கூறியது அரசியலை பற்றி தான் என பல்வேறு அரசியல் தலைவர்கள்,   திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களுடைய கருத்தை முன் வைத்து வருகின்றனர். 

 கிட்டத்தட்ட அனைவருமே அவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்றே கூறி வருகின்றனர். ஒருசிலர் மட்டும் அவர் வரமாட்டார், வரவேண்டாம் என்று கூறி வருகின்றனர். 

தற்போது இது குறித்து பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, கூறியபோது , ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை' என அடித்து கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,  ரஜினிகாந்த் ஒவ்வொரு முறைபேசும்போதும்  அரசியலுக்கு வருவது காலத்தின் கையில், ஆண்டவன் கையில் என்று 25 வருஷமா கூறி வருகிறார். 

நான் தீவிரமான சூப்பர் ஸ்டார் ரசிகன் என்ற முறையில் சொல்றேன். அவர் அரசியலுக்கு வருவார்  என்ற நம்பிக்கை  எனக்கு இல்லை' 
மேலும் ரஜினி தனது படங்கள் வெளியாகும்போது மட்டும் அரசியல் குறித்து பேசுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஆர்ஜே பாலாஜி கூறியபோது, 'யாராவது புது ஹீரோ இப்படிப் பண்ணினால் `ஸ்டன்ட்'னு சொல்லலாம். 

ஆனால், சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆச்சுன்னா, இந்தியா முழுவதும் உள்ள நியூஸ் சேனலில் விவாதமே நடத்துறாங்க. `ஷாரூக்கான்கிட்ட இல்லாதது, அமீர்கான்கிட்ட இல்லாதது, சூப்பர் ஸ்டார்கிட்ட என்ன இருக்கு?'னு அதனால, படம் ஓடவைக்கணும்னு ஸ்டன்ட் மாதிரி எனக்குத் தெரியலை. ஆனா, 99.99 சதவிகிதம் ரஜினி, அரசியலுக்கு வர மாட்டார்' என்று கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!