
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 8 வருடங்களுக்கு பிறகு, கடந்த ஐந்து நாட்களாக தனது ரசிகர்களை அவருடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வந்தார்.
நேற்றைய தினம், ரசிகர்கள் முன் அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாக பேசினார். போர் வரும்போது களத்தில் இறங்குவோம் என்று அவர் கூறியது தேர்தலின்போது அரசியல் களத்தில் குதிக்க அவர் முடிவு செய்திருப்பதாக அர்த்தம் எடுத்து கொள்ளப்பட்டு பலவித விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் எப்போது ரஜினி அரசியக்கு வருவார் என காத்திருந்த ரசிகர்கள், இவருடைய பேச்சால் தற்போது பரபரப்பாக செயல் பட துவங்கிவிட்டனர்.
ஒருசில ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் ரஜினியை முதல்வராகவே சித்தரித்து தமிழகத்தின் பல பகுதிகளில் போஸ்டர் ஓட்டவும் ஆரம்பித்துவிட்டனர்.
தமிழகத்தின் முக்கிய நகரம் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த போஸ்டரில் 'பணமும் வேண்டாம், பதவியும் வேண்டாம், எம்.எல்.ஏ பதவியும் வேண்டாம், எம்பி பதவியும் வேண்டாம், அதுக்கும் மேல, தொண்டன் என்ற பதவியே போதும் தலைவா, ஏழைகளின் முதல்வரே, மாற்றம் உங்களால் மலரட்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.