''பிரபாஸ் தான் ஆணழகன், ராணா என் அண்ணன்'' - அசத்தும் அனுஷ்கா...

 
Published : May 20, 2017, 07:38 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
''பிரபாஸ் தான் ஆணழகன், ராணா என் அண்ணன்'' - அசத்தும் அனுஷ்கா...

சுருக்கம்

PRABHAS is the Most SEXIEST and Rana is my BROTHER Anushka Shocking Comments

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் சேர்ந்து நடித்துள்ளனர்மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

பாகுபலியில் நாயகன் நாயகி அனுஷ்கா, பிரபாஸ் இருவருக்கும் 30 வயதை கடந்தாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திரையில் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட ஜோடி  நிஜ வாழ்வில் இணைந்தால் அருமையாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். 

இருவரும் காதல் செய்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட இருவருமே கண்டுகொள்ளவில்லை, மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்காவிடம் பிரபாஸ், ராணா இருவரில் யார் ஆணழகன் என கேட்கப்பட்டது. யாரை அனுஷ்கா தேர்ந்தெடுப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, பிரபாஸ் தான் ஆணழகன் என அசால்ட்டாக சொல்லிவிட்டார் அனுஷ்கா.

ராணா என்னை எப்பொழுதுமே சிஸ்டர் என்று தான் அழைப்பார். பதிலுக்கு நானும் அவரை பிரதர் என்றே அழைப்பேன் என்று அனுஷ்கா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அனுஷ்கா பாகுபலி படங்களுக்கு முன்பாக பில்லா, மிர்ச்சி ஆகிய படங்களில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவருடன் நடிக்க தயார் என்று அனுஷ்கா கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது